Blog

பெண்ணியம்

admin

Apr 21, 2022

0

பேசாத பெண்ணைப் பேச வைத்து

நேசம் அதலாளவளை பேதலிக்க வைத்து பின்

காசுதான் வேண்டுமென்றில்லை

காசும் வேண்டும் என்பீர்!

சின்னதாய் ஒரு வீடும் , பொன் நகை முப்பது இருந்தாலும்

கண்ணாடிப் பெண் வேண்டாம் 

கறுப்பியா? அவள் வேண்டாம்

தெத்துப்பல் வேண்டாம்

குட்டையா? அவள் வேண்டாம்

எத்தனை எத்தனை

எத்தனையோ நிபந்தனைகள்

அத்தனையும் தாண்டி வென்றால்

இத்தரையில் இல்லறமாம்………

மலர்ச்சியாய் மங்கையவள்

எவருடனும் பேசிவிட்டால்

மகிமை இல்லாப் பெண் என்பீர்!

பேசு விருப்பின்றி ஒதுங்கினால்

திமிர் பிடிச்சவள் என்பீர்!

வேலைக்கு போகும்போது

வேலையற்றவர்களின்

பார்வைக் கணைகளால்

தீர்த்துப் போனாள்

வெட்கம் ஒரு புறம் கூடவே 

வேதனைக்கு காதல் என்ற பெயரில் 

வேண்டாத உறவுகள் ஒருபுறம்

இத்தனையும் தாண்டி அவள் 

மேலேறி வர அவளை 

கொன்று போட்டது 

அவள் ஒரு மாதிரியாம் என்று 

அவளின் வியர்வையும் கண்ணீரும்

அந்தக்கணமே குருதியாய் பாய பாவம் 

அவள் இதயம் இந்த வேகத்தை தாங்காமல் 

அமைதியாய் போனது.

About the Author:

admin

Thirukumar Premakumar

Share This Entry