Blog

Narratives of SYA: Hear from Mahendran Dilaxan!

Jun 11, 2022

0

TAMIL 

SYA இன் அனுபவப் பகிர்வுகள்: இது மகேந்திரன் டிலக்ஷனின்  கதை! 

SYA  இன் ஒரு வருட பயணத்தில் அது சந்தித்த இளைஞர்களும் அவர்களின் கதைகளும் நாட்டின் எதிர் கால சந்ததியினரை பற்றிய தெளிவை வெளிக் கொண்டு வந்துள்ளன. இது, அவ்வாறான ஒரு இளைஞன் தன் பிரதேச முன்னேற்றத்துக்காக காணும் கனவு SYA மூலம் எவ்வாறு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய கதையே. வாருங்கள், டிலக்ஷனிடம் அது பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வோம். 

“நான் மகேந்திரன் டிலக்ஷன். முல்லைத்தீவில் வசித்து வருகிறேன். 

SYA வை பற்றி எனது மாவட்ட பயிற்சி வசதியாளர் மூலமும் சமூக வலைத்தளம் மூலமும் தெரிந்து கொண்டதையடுத்து அதற்காக விண்ணப்பித்தேன். ஒரு நீண்ட தெரிவு செய்கை படிமுறையின் பின்னர் உத்தியோகபூர்வமாக SYA இன் இன்டர்னாக தெரிவு செய்யப்பட்டேன். 

A/L பரீட்சையை விஞ்ஞான தொழிநுட்பத் துறையில் தோற்றி, பல்கலைக்கழக தெரிவுக்காக காத்திருந்த எனக்கு SYA மூலம் கிடைத்த வாய்ப்பு வெற்றியை நோக்கிய எனது இலட்சியப் பாதையில் உறுதியான அடித்தளத்தை உருவாக்கி தந்துள்ளது. 

பூட்கேம்ப் பயிற்சி தொடர், 4 மாத இன்டர்ன்ஷிப் பயிற்சிநெறி மற்றும் Capstone திட்ட நடைமுறைகளுடன் இணைந்து வார குறிப்பேடு மூலம் SYA உடனான எனது பயண அனுபவங்கள் மற்றும் கற்கைகளை ஒரு தொகுப்பாக என்றும் என்னுடன் துணையாக கொண்டு செல்லக் கூடியவாறு SYA திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியதே! 

என்னில் இருக்கின்ற புள்ளி விவரவியல் மற்றும் உயிரியல் தொழிநுட்பம் சார்ந்த ஈடுபாடு மற்றும் ஆர்வத்தை சரியான திசையில் கொண்டு செல்ல SYA இன் இன்டர்ன்ஷிப் மூலம் கிடைத்த வழிகாட்டல் மற்றும் வாய்ப்பு அபரிமிதமானது. 

பணி நிமித்தம் வைத்தியசாலை சூழல் மற்றும் அது சார்ந்த அலுவலகங்களிலேயே நான் அதிக நேரம் செலவிட தேவைப்பட்டதால், அதனூடாக நான் பெற்றுக் கொண்ட தொழில் மற்றும் வாழ்வியல் சார் கற்கைகள் என்னில் இருந்த இலட்சியத்தை அடைவதற்கான தேடலை இன்னும் விரிவுபடுத்தியது எனலாம். 

ஆவணப்படுத்துதல், தரவு உள்ளீடு மற்றும் கணக்கீடு என தொழில் துறை அனுபவத்துடன், இன்டர்ன்ஷிப் காலத்தில் நான் சந்தித்த நபர்கள் குறிப்பாக வைத்தியர்கள் மற்றும் நோயாளிகள் என அவர்களின் இரு பக்க கதைகளும் அதன் மூலம் பெற்றுக் கொண்ட அறிவும் தெளிவும் என் பிரதேச மக்களுக்கான சேவை இளைஞர்களாகிய எம்மால் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற நடைமுறை உலகின்  அழைப்பை உறுதியாக என் மனதில் பதிய வைத்துள்ளது. 

ஒதுக்கீடு, பாகுபாடு, பின்தங்கிய நிலைமை மற்றும் அபிவிருத்தியில் பின்னடைவு என நான் வசிக்கும் பிரதேசத்தில் எதிர் கொள்கின்ற அனைத்து சவால்களுக்கும் முகங் கொடுக்க SYA என்னுடன் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடனேயே SYA இல் இணைந்தேன். என் நம்பிக்கைக்கு SYA அளிக்கின்ற பங்களிப்பு பாரிய ஆதாரமாகவும் பலமாகவும் காணப்படுகின்றது.

என் கிராம-பிரதேச-மாவட்ட இளைஞர்கள் காலம் காலமாக தேடிக் கொண்டிருக்கும் வெற்றிக்கான திறவுகோலாக SYA எம்மை வந்தடைந்துள்ளது என்று கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். 

SYA ஓர் அத்தியாயத்துடன் முடியக் கூடாது; அது பல அத்தியாயங்கலான ஒரு தொடர்ச்சியான திட்டமாக அமுல்படுத்தப்பட வேண்டும்! 

இத்திட்டத்திற்கு இணைக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வேலை செய்யக்கூடிய நிறுவனங்களை இனங்கண்டு அவற்றில் அவர்களை பயிற்சிக்காக இணைப்பதன் மூலம் SYA இன் நிலைத்தன்மை மேலும் வலுப்படுத்தப்படுவது SYA-ஐ இன்னும் பிரகாசமாக ஒளிரச் செய்யும்.”

இது அவருடைய கதை.  மேலும் இது போன்ற கதைகளை கேட்க ஆர்வமாக உள்ளீர்களா?  SYA வலைப்பதிவு தளத்துக்கு செல்லுங்கள், மேலும் வாழ்க்கையை மாற்றும் அனுபவங்களின் கதைகளால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

ENGLISH

Narratives of SYA: Hear from Mahendran Dilaxan!  

The young people who met with SYA during its one-year journey and their stories have shed light on the future generations of the country.  This is the story of how the dream of such a young man for the betterment of his village has been strengthened by SYA.  Let’s hear from Dilaxan! 

“I am Mahendran Dilakshan. Mullaitivu is where I call home. SYA was introduced to me by my district training facilitator and the social media posts and I applied. After a thorough selection procedure, I was officially accepted as an intern at SYA.

Having passed the A/L exam in biotechnology and awaiting university entrance, the opportunity I got through SYA has set a strong basis for my desired road to success.

It’s commendable that the SYA program is structured to carry us to keep track of our learnings and experiences with the journey of SYA via a weekly journal in conjunction with the Bootcamp Training Series, 4 Month Internship Course, and Capstone Project Practices!

SYA’s internship provided me with invaluable assistance and opportunities to direct my involvement and interest in statistics and biotechnology in the proper direction.

As I needed to spend more time in the hospital environment and related offices for work, the career experience and life learnings I gained through it, have further expanded my quest to achieve the goal I had.

With industry experiences such as documentation, data entry, and computation, I have firmly imprinted in my mind the call of the contemporary world that the people I met during the internship, especially the doctors and patients, both their side stories and the knowledge and clarity gained through them, should be carried forward by us-the youth as service to the people of my area. 

I joined SYA in the hopes that it would help me overcome the obstacles I experience in my community, such as segregation, prejudice, and developmental backwardness. SYA’s contribution to my faith is seen as a tremendous source of strength.

I believe it is appropriate to state that SYA has shown to be the key to the success that my rural-district youth have been seeking for a long time.

Further, SYA’s long-term viability will be enhanced by identifying organizations that can provide long-term employment to those who participate in the program and linking them to training.

SYA should not be limited to a single chapter; it should be developed as a multi-chapter program which would make him bright in the long-term flames!”

This is his story. Are you interested in listening to more? Reach out to the SYA blog category, you’ll be surprised and inspired by much more life-changing feature stories of experiences. 

SINHALA 

SYA හි ආඛ්‍යාන : මෙය මහේන්ද්‍රන් ඩිලක්ශන්ගේ කතාවයි!

SYA හි වසරක ගමනේදී හමුවූ තරුණ තරුණියන් සහ ඔවුන්ගේ කතාන්දර රටේ අනාගත පරපුරට ආලෝකයක් ලබාදී ඇත.  එවන් තරුණයකුගේ තම භූමියේ අභිවෘද්ධිය පිළිබඳ සිහිනය SYA විසින් ශක්තිමත් කර ඇති අයුරුයි මේ.  එන්න, ඩිලක්ශන්ගෙන් ඒ ගැන අසා දැන ගනිමු. 

“මම මහේන්ද්‍රන් දිලක්ෂන්.  මම ජීවත් වෙන්නේ මුලතිව්වල. මම මගේ දිස්ත්‍රික් පුහුණු පහසුකම් සපයන්නා සහ සමාජ මාධ්‍ය හරහා SYA ගැන දැනගෙන ඒ සඳහා ඉල්ලුම් කළෙමි.  SYA හි සීමාවාසිකයෙකු ලෙස මා නිල වශයෙන් තෝරාගනු ලැබුවේ දීර්ඝ තේරීම් ක්‍රියාවලියකින් පසුවය.

විද්‍යා හා තාක්ෂණ ක්‍ෂේත්‍රයේ උසස් පෙළ සමත් වී විශ්වවිද්‍යාල වරම් බලාපොරොත්තුවෙන් සිටි මට SYA හරහා ලැබුණු අවස්ථාව මගේ සාර්ථකත්වය කරා යන පරමාදර්ශී මාවතට ශක්තිමත් අඩිතාලමක් දමා ඇත.

Bootcamp පුහුණු මාලාව, 4 මාස සීමාවාසික පාඨමාලාව සහ Capstone ව්‍යාපෘති පරිචයන් සමඟින් සතිපතා සටහන් පොතක් හරහා SYA සමඟ මගේ සංචාරක අත්දැකීම් සහ අධ්‍යයන එකතුවක් මා සමඟ රැගෙන යාමට SYA වැඩසටහන සැලසුම් කර තිබීම ප්‍රශංසනීයයි!

සංඛ්‍යානමය සහ ජෛව තාක්‍ෂණය පිළිබඳ මගේ මැදිහත්වීම සහ උනන්දුව නිවැරදි දිශාවට යොමු කිරීමට SYA හි සීමාවාසික පුහුණුව ලබා දුන් මග පෙන්වීම සහ අවස්ථාව අතිමහත්ය.

වැඩ සඳහා රෝහල් පරිසරයේ සහ ඒ ආශ්‍රිත කාර්යාලවල වැඩි කාලයක් ගත කිරීමට අවශ්‍ය වූ බැවින්, ඒ හරහා මා ලබාගත් වෘත්තීය අධ්‍යයන මට තිබූ ඉලක්කය සපුරා ගැනීමේ උත්සාහය තවත් පුළුල් කරන්නට ඇත.

ලේඛනගත කිරීම, දත්ත ඇතුළත් කිරීම සහ ගණනය කිරීම වැනි ක්ෂේත්‍ර අත්දැකීම් සමඟින්, සීමාවාසික පුහුණුව අතරතුර මට හමු වූ පුද්ගලයින්, විශේෂයෙන් වෛද්‍යවරුන් සහ රෝගීන්, ඔවුන්ගේ දෙපාර්ශව කතා සහ ලබාගත් දැනුම සහ පැහැදිලිකම යන දෙකම මගේ මනසෙහි තදින් කාවැදී ඇත. ඒ හරහා මගේ ප්‍රදේශයේ ජනතාවට සේවය කිරීම තරුණයන් ලෙස අපි ඉදිරියට ගෙන යා යුතුයි යන වග මට පැහැදිලි වී තිබේ.

මම SYA හා සම්බන්ධ වූයේ මා ජීවත් වන ප්‍රදේශයේ වෙනස් කොට සැලකීම සහ සංවර්ධන පසුගාමීත්වය වැනි මා මුහුණ දෙන සියලුම අභියෝගවලට මුහුණ දීම සඳහා SYA මට සහාය වනු ඇතැයි යන බලාපොරොත්තුව ඇතිවය.  මගේ විශ්වාසයට SYA හි දායකත්වය දැවැන්ත මූලාශ්‍රයක් සහ ශක්තියක් ලෙස පත්වී ඇත.

මගේ ග්‍රාමීය-දිස්ත්‍රික් තරුණ තරුණියන් කාලයක් තිස්සේ සොයමින් සිටි සාර්ථකත්වයේ යතුර ලෙස SYA අප වෙත පැමිණ ඇති බව පැවසීම සුදුසු යැයි මම බලාපොරොත්තු වෙමි.

SYA හි තිරසාරභාවය තවදුරටත් ශක්තිමත් කිරීම මගින් SYA වැඩසටහනට අනුබද්ධිත පුද්ගලයින්ට අඛණ්ඩව සේවයේ යෙදවිය හැකි සමාගම් හඳුනාගෙන ඔවුන්ව පුහුණුවට සම්බන්ධ කිරීම මගින් SYA තවදුරටත් දීප්තිමත් කරනු ඇත.

SYA එක පරිච්ඡේදයකින් අවසන් නොවිය යුතුය;  පරිච්ඡේද කිහිපයක අඛණ්ඩ වැඩසටහනක් ලෙස එය ක්‍රියාත්මක කළ යුතුයි!”

මේ ඔහුගේ කතාවයි. ඔබ තවත් කථනවලට සවන් දීමට කැමතිද?  SYA බ්ලොග් ප්‍රවර්ගය වෙත ළඟා වන්න, ඔබ වඩාත් ජීවිතය වෙනස් කරන අත්දැකීම් පිළිබඳ විශේෂාංග කථාවලින් පුදුමයට පත් වනු ඇත.

About the Author:

Share This Entry