Blog

Narratives of SYA: Hear from Najanesan!

admin

Jun 14, 2022

0

TAMIL 

SYA இன் அனுபவப் பகிர்வுகள்: இது நயனீசனின்  கதை! 

SYA : முற்று முழுதாக இளைஞர்களுக்கானது, இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் அவர்களை வலுப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது. அந்த வகையில், கிளிநொச்சியின் இளைஞர் ஒருவரின் வாழ்க்கை படிகட்டுகளில் SYAஇன் வருகை எவ்வகையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றிய கதையே இது. வாருங்கள், நயனீசனின் SYA உடனான தன் பயணம் பற்றி பகிர்ந்து கொள்வதை கேட்போம். 

“நான் நயனீசன். கிளிநொச்சியை சேர்ந்தவர். எனது நண்பர் ஒருவர் மூலம் SYA திட்டம் பற்றி தெரிந்து கொண்டதையடுத்து இத் திட்டம் என்னைப் போன்ற இளைஞர்களுக்கான சிறந்த வழிகாட்டலாக அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்புடனேயே விண்ணப்பித்தேன்.

எழுத்து, கவிதை, நாடகம், புகைப்படமாக்கல் மற்றும் இதழியல் துறை என என் வாழ்க்கையின் விருப்பத் தெரிவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் இவற்றையெல்லாம் தொடர்ந்து என் வாழ்வில் என்னுடன் அழைத்துச் செல்ல ஓர் உறுதியான தொழில் அவசியம் என்பதை காலம் வற்புறுத்தி நிற்கவே, SYA ஐ அதற்கான பாதையாக தேர்ந்தெடுத்தேன். 

கைவசம் உறுதியான வேலை இன்றி பகுதி நேர வேலைகளில் கடமையாற்றி வந்தேன். அந்த நேரத்தில் தான் SYA ஐ வாழ்க்கை படிகட்டுகளில் உறுதியான தூணாக கண்டு கொண்டேன். இப்போது SYA இல் கிடைத்த வாய்ப்பின் மூலம் ஒரு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் திட்ட அலுவலராக கடமையாற்றுகிறேன்.

ஒரு வேலையற்ற இளைஞனின் எதிர்கால கனவுகளுக்கு உயிரூட்டுகின்ற  அனுபவத் திரட்டாகவே நான் SYA ஐப் பார்க்கிறேன்.

SYA மூலம் நான் கற்றவை அதிகம்; அதேபோல் பெற்றுக் கொண்டவை ஏராளம். 4 நாள் பூட்கேம்ப் பயிற்சி என் மாவட்டத்திலேயே சமூக நலன்களுக்காக செயற்படக் கூடிய ஒரு இளைஞர் வலையமைப்பைப் பெற்றுத் தந்துள்ளது. மனித வேற்றுமைகள் கொண்டாடப்பட வேண்டியவை; வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பது எவ்வளவு அழகான நெறிமுறை என்பதை எனக்கு அனுபவமாக காட்டியுள்ளது. 

4 மாத இன்டர்ன்ஷிப் அனுபவம், ஒரு இளைஞன் எப்படியும் வாழலாம் என்ற இலகுவில் வழி தவறிச் செல்லக் கூடிய பாதையிலிருந்து மீண்டு இப்படித் தான் வாழ வேண்டும் என்ற தீர்க்கமான பாதையில் பயணிக்க வைத்துள்ளது. இவ் இன்டர்ன்ஷிப் அனுபவம் என்னை குறிப்பிட்ட ஒரு வட்டத்தில் சுழல வைக்காது, பயிற்சியாளர், கள அதிகாரி, திட்ட முகாமையாளர் என பல பாத்திரங்களை ஏற்று செவ்வனே பணியாற்றக் கூடிய வாய்ப்பை எனக்குத் தந்தது. 

தொழில் ரீதியான என் அனுபவங்களுடன் SYA ஆனது சமூக பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இளைஞர்களை வழிப்படுத்தும் செயல்முறை, கிளிநொச்சி போன்ற பின்தங்கிய மாவட்டங்களுக்கு புதிய ஒரு எதிர்பார்ப்பை வழங்கியுள்ளது எனலாம். 

தனிப்பட்ட ரீதியில், பல கிராமங்களுக்கு சென்று அங்கு வாழும் மக்களின் நிலைமையினை ஒரு படியாவது மேல்கொண்டு வர என்னால் உதவ முடிந்ததையிட்டு நான் பெரிதும் மகிழ்வடைகிறேன். SYA மூலம் என் மாவட்டத்தின் நிலை அரச நிறுவனங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு எம்மால் வடிவமைக்கப்பட்ட சில திட்டங்கள் அரச அனுசரனையுடன் விரிவுபடுத்தப்பட இருப்பதானது, நிச்சயம் SYA இளைஞர்கள் கண்ட ஒரு வெற்றியே! 

ஆம், ஒற்றை வரியில் கூறுவதானால், “SYA என்பது இளைஞர் புத்தாக்க செயற்பாட்டுக்கு புது வரைவிலக்கணம் வழங்கியுள்ளது” எனலாம். என் மாவட்டத்துக்கு, SYA ஒரு வரம்; இளைஞர்களை வளப்படுத்தும் திட்டம்!

இத் திட்டத்தை அரச நிறுவனங்கள் உள்வாங்க வேண்டும் என நினைக்கிறேன். இளைஞர்களில் ஒரு புதிய நம்பிக்கையை உத்வேகத்தை SYA கொண்டு வந்திருக்கும் இந் நிலையில் இது வருடாந்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது அபிலாஷை ஆகும்!” 

இது அவருடைய கதை.  மேலும் இது போன்ற கதைகளை கேட்க ஆர்வமாக உள்ளீர்களா?  SYA வலைப்பதிவு தளத்துக்கு செல்லுங்கள், மேலும் வாழ்க்கையை மாற்றும் அனுபவங்களின் கதைகளால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

SINHALA

SYA හි ආඛ්‍යාන: මෙය නයනීසන්ගේ කතාවයි!

SYA: සම්පූර්ණයෙන්ම තරුණයින් සඳහා, ඔවුන් සවිබල ගැන්වීම මත පදනම් වේ.  ඒ අර්ථයෙන්, මෙය SYA ගේ ආගමනය කිලිනොච්චියේ තරුණයකුගේ ජීවිතය වෙනස් කළ ආකාරය පිළිබඳ කතාවයි.  එන්න, ඔහුගෙන් ඒ ගැන අසා දැන ගනිමු. 

“මම නයනීසන්. මම කිලිනොච්චියේ වාසය කරමි. මගේ මිතුරෙකුගේ මාර්ගයෙන් SYA ව්‍යාපෘතිය ගැන දැනගත් පසු මම අයදුම් කළේ මෙම ව්‍යාපෘතිය මා වැනි තරුණ තරුණියන්ට විශාල මග පෙන්වීමක් වේ යැයි අපේක්ෂාවෙනි.

ලේඛනය, කවිය, නාට්‍ය, ඡායාරූපකරණය සහ පුවත්පත් කලාව වැනි මගේ වෘත්තීය තේරීම් බොහොමයක මා සම්බන්ධ වී සිටියද, මම මගේ මාවත ලෙස SYA තෝරා ගත්තේ මගේ ජීවිතය සමඟ ගෙන යාමට නිශ්චිත වෘත්තියක් අවශ්‍ය බව කාලය මට අවධාරනය කර දුන් බැවිනි. 

මට ස්ථිර රැකියාවක් නොමැතිව අර්ධකාලීනව වැඩ කරමින් සිටිය දී ජීවිතයේ පඩිපෙළේ සවිමත් කණුවක් ලෙස මම SYA දුටුවේ එම අවස්ථාවේදීය.  දැන් SYA මගින් ලැබුණු අවස්ථාවත් එක්ක මම NGO එකක ව්‍යාපෘති නිලධාරියෙක් විදියට වැඩ කරනවා.

රැකියා විරහිත තරුණයකුගේ අනාගත සිහිනවලට ජීවය දෙන අත්දැකීම් සමුහයක් ලෙස මම SYA දකිමි.

SYA හරහා මා ඉගෙන ගත් දේ බොහෝ ය;  ඒ වගේම ලැබුණු දේත් බොහෝය.  දින 4ක Bootcamp පුහුණුව, මගේ දිස්ත්‍රික්කයේ ප්‍රජාවගේ යහපත සඳහා ක්‍රියා කළ හැකි තරුණ ජාලයක් ගෙනවිත් ඇත. එය අප අතර තිබෙන වෙනස්කම් සැමරිය යුතුය;  විවිධත්වය තුළ එකමුතුකම දැකීම කෙතරම් සුන්දර ආචාර ධර්මද යන්න අත්දැකීම් මට පෙන්වා දී ඇත.

තරුණයෙකුට ජීවිතයේ ගොඩ ඒමට ඕනෑම මාර්ගයෙකින් නොව නිසි ආකාරයට ජීවත් වීම තුළින් පුලුවන් බව අධිෂ්ඨානශීලී මාවතකට යොමු කරමින් මාස 4 ක සීමාවාසික අත්දැකීම් කියා දී ඇත.  මෙම සීමාවාසික අත්දැකීම මාව එකම කවයක් තුළ නොඇදුණු අතර පුහුණුකරු, ක්ෂේත්‍ර නිලධාරියා, ව්‍යාපෘති කළමනාකරු වැනි විවිධ භූමිකාවන්හි වැඩ කිරීමට මට අවස්ථාව ලබා දුන්නේය.

මගේ වෘත්තීය පළපුරුද්ද සමඟින් සමාජ ගැටලු හඳුනාගෙන ඒවා විසඳීමට උත්සාහ කිරීම සඳහා තරුණයින්ට මග පෙන්වීමේ ක්‍රියාවලිය තුළින් SYA විසින් කිලිනොච්චිය වැනි පසුගාමී දිස්ත්‍රික්කවලට නව ඉදිරිදර්ශනයක් ලබා දී ඇත. 

ගම්මාන රැසකට ගොස් එහි වෙසෙන ජනතාවගේ තත්ත්වය තවත් පියවරක් ඉදිරියට ගෙන ඒමට උදව් කිරීමට හැකිවීම ගැන පෞද්ගලිකව මම ඉතාමත් සතුටු වෙනවා.  SYA හරහා මගේ දිස්ත්‍රික්කයේ තත්ත්වය රාජ්‍ය ආයතනවල අවධානයට යොමු කර ඇති අතර අප විසින් සැලසුම් කරන ලද සමහර ව්‍යාපෘති රාජ්‍ය අනුග්‍රහය ඇතිව ව්‍යාප්ත කිරීමට සැලැස්වීම SYA තරුණ තරුණියන් දකින සාර්ථකත්වයකි!

ඔව්, කෙටියෙන් කිවහොත්, “SYA තරුණ නවෝත්පාදනයට නව නිර්වචනයක් ලබා දී ඇත.”  මගේ දිස්ත්‍රික්කයට, SYA යනු ආශිර්වාදයකි;  තාරුණ්‍යය පොහොසත් කිරීමේ ව්‍යාපෘතිය කි!

මම හිතන්නේ රාජ්‍ය ආයතන මේ ව්‍යාපෘතිය වැළඳගත යුතුයි.  SYA තරුණ තරුණියන්ට නව බලාපොරොත්තුවක් සහ ආශ්වාදයක් ගෙන දෙන බැවින්, එය වාර්ෂිකව ක්‍රියාත්මක කිරීම මගේ ආශාවයි!” 

මේ ඔහුගේ කතාවයි. ඔබ තවත් කථනවලට සවන් දීමට කැමතිද?  SYA බ්ලොග් ප්‍රවර්ගය වෙත ළඟා වන්න, ඔබ වඩාත් ජීවිතය වෙනස් කරන අත්දැකීම් පිළිබඳ විශේෂාංග කථාවලින් පුදුමයට පත් වනු ඇත.

ENGLISH 

Narratives of SYA: Hear from Najanesan!

SYA: Dedicated entirely to empowering young people. In that notion, this is the story of how the advent of SYA transformed the life of a young man in Kilinochchi. Let’s hear it from Najanesan!”

I am Najanesan, from Kilinochchi. After getting to know about the SYA project through a friend of mine, I  applied with the wish that it would be a great resource for young people like me.

Although I have been involved in many of my passionate choices, such as writing, poetry, drama, photography, and journalism, I decided SYA lead my path, reiterating that time was required for a distinct profession to hold my passionate choices with me throughout my life. 

I was working part-time because I didn’t have a steady job. At the time, I saw SYA as a solid pillar on life’s stairwell. With the opportunity I received at SYA, I am now working as a field officer for an NGO.

SYA, in my opinion, is a collection of experiences that give life to an unemployed young person’s future dreams. 

SYA has taught me and given me a lot. The four-day boot camp training has built a youth network in my district that can work for the community’s benefit. I’ve learned and experienced that human differences should be celebrated; experience has taught me how beautiful it is to see unity in diversity.

4 months of internship experience have taught me that to be successful in life, a young person should follow a clear path rather than take detours. This internship experience did not lead me in a circle. It allowed me to work in a variety of roles, including trainer, field officer, and many others.

With my professional experience, SYA has also given backward districts like Kilinochchi a new perspective by guiding youth to identify social problems and work to solve them.

I am overjoyed that I was able to visit so many villages and help improve the lives of the people who live there even further. The fact that my district’s status has been brought to the attention of government agencies through SYA, and that some of the projects designed by us are to be expanded with government sponsorship, is unquestionably a success as seen by the SYA youth!

To put it succinctly, “SYA has given a new definition to youth innovation.” SYA is a blessing to my district; it is truly a youth enrichment project!

Government agencies, in my opinion, should support this project. I hope that this should be executed on an annual basis, as SYA lends young people new hope and inspiration!”

This is his story. Are you interested in listening to more? Reach out to the SYA blog category, you’ll be surprised and inspired by much more life-changing feature stories of experiences. 

About the Author:

admin

Thirukumar Premakumar

Share This Entry

Array