Blog

அதிகாரத்தை ஒழித்துக்கட்ட அதிகாரம் நமக்குத் தேவை

admin

Jun 23, 2020

0

Source : Votewomensl

உலக நாடுகள் முழுவதிலும் ஜனநாயக ஆட்சியை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது பிரதிநிதித்துவ அரசியலின் இன்றியமையாத தன்மை உணரப்பட்டு விட்டது மக்களாட்சி முறையின் கீழ் நாட்டில் ஆட்சி அதிகாரம் ஆனது சட்டரீதியாக குறிப்பிட்ட சில வகுப்பினர் இடம் அல்லது ஒரு அமைப்பினரிடம் இருப்பதில்லை . அது சமூகத்தில் உள்ள சகல அங்கத்தவர்கள் இடமும் இருக்கின்றது. இந்நிலையில் இப் பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலில் முக்கியத்துவம் பெறுவது யாதெனில் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு அவர்கள் சார்பாக அரசியல் நிர்வாகத்தை கொண்டு செல்ல போகும் பிரதிநிதியைத் தெரிவு செய்வது என்பதாகும்.
ஏனெனில் அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் தன்னை தெரிவு செய்த மக்களுக்கு சரியான சேவையை வழங்க கூடியவராக இருக்க வேண்டும் என்பதாகும். இத்தகைய நிலையில் பிரதிநிதித்துவம் அரசியலில் பெண்களின் பங்குபற்றல் என்பது மிகக் குறைவாகவே உள்ளது. இந் நிலைமையானது அரசியல் நிறுவனங்களில் பெண்களின் குறைவான பிரதிநிதித்துவம் என்பது இலங்கைக்கு மாத்திரம் உட்பட்ட நன்று. மிகச் சில விதிவிலக்குகள் உடன் உலகம் முழுவதுமே ஒரு பொது போக்காகவே காணப்படுகின்றது எனலாம்.
குறிப்பாக தெற்காசிய நாடுகளில் பொதுவான பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றில் சகல பெண்களுக்குமான நீதி, நியாயத்தையும் சமத்துவத்தையும் எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது முக்கியமானதாகும். இலங்கையில் பெண்கள் தமது உரிமைகளைக் கோரி மிகவும் ஆர்வத்துடன் போராடி வருகின்ற அதேநேரம் வாக்களிப்பு என்பதற்கு அப்பால் தமது அரசியல் சமூக நோக்கங்களை தெளிவாக எடுத்துக் காட்டுவதில் இன்று வரையில் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
தொடர்ந்தும் நாட்டின் முதல் பிரஜை என்ற எண்ணம் ஆண்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது அதேநேரம் தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் பெண்கள் ஓரங்கட்டப்பட்ட வண்ணமே உள்ளார்கள் எனினும் தற்போது பெண்கள் அரசியலில் முக்கிய இடம்பெறுவது பெண்கள் சார்ந்த முன்னேற்றத்திற்கும் வலுவூட்டும் மிகவும் அவசியமானது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையில் பெண்களின் அரசியல் பிரவேசம் ஆனது 1932 ஆம் ஆண்டு கொழும்பு வடக்கு தொகுதியில் சார்பில் அரசாங்க சபைக்கு நேசம் சரவணமுத்து தெரிவுசெய்யப்பட்டமை தமிழ் பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு சிறந்த அடித்தளத்தை விட்டது.
1989 ஆம் ஆண்டு இராஜ மனோகரி புலேந்திரன் வவுனியா தொகுதிக்கு நியமிக்கப்பட்டார் அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார் 1994ஆம் ஆண்டு முழுவதும் தெரிவுசெய்யப்பட்டதோடு கல்வி இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்று மந்திரி பதவி வகித்த முதலாவது தமிழ் பெண்மணி என்ற பெயரைப் பெற்றிருந்தார். அதேபோன்று 1947 ஆம் ஆண்டு கொழும்பில் தேர்தலில் போட்டியிட்ட ஆயிஷா ரவூப் என்பவரே அரசியலில் ஈடுபட்ட முதலாவது முஸ்லிம் பெண்மணி ஆவார். இதே போன்று திருமதி பண்டாரநாயக்கா பெண்கள் அரசியல்வாதிகளுக்கு ஒரு சக்திமிக்க முன்மாதிரியாக கொல்லப்படுகின்றார் அவர் நாட்டை வழி நடாத்திய போது தனது பெண்மை பற்றியும், பெண்களின் சரியான வகிபங்கு பற்றியும் அவர் பெரிதும் அக்கறை கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு இலங்கையின் உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் பெண்களின் பங்குபற்றல் ஆனது 25 சதவீதமாக இருக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டது அத்துடன் ஒவ்வொரு உள்ளூராட்சி சபையையும் 25 வீதமான உறுப்பினர்களாக காணப்படவேண்டும் என திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது இந்த நடவடிக்கையானது இலங்கை அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதாக அமையும் என

Source : Votewomensl

அப்போதே பரவலாக கூறப்பட்டது. ஆனாலும் இத் திருத்தச் சட்டத்திலும் கூட சில பெண் வேட்பாளர்கள் குறைபாடுகள் காணப்படுவதாக பெண் வேட்பாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர் இதன்படி உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களின் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைகள், வேலைத்திட்டங்கள் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் நிறுவனங்களினால் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மேலும் வலுப்படுத்த கூடியதாக இருக்கும் என நம்புகிறேன்.அத்துடன் பெண்கள் அரசியலில் உள்வாங்கப்படுவதன் ஊடாகவே பெண்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து அதற்கான தீர்வுகளையும் பெற்றுக் கொடுக்க முடியும்.
மேலும் காலம் காலமாக பெண்கள் ஓரங்கட்டப்படும் நிலை மாற்றமடைய வேண்டும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை தெரிந்தவர்களே அவர்களது பிரச்சினையை தீர்த்து வைக்கக் கூடியதாக இருக்கும். எனவே பெண்களின் அரசியல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் அதற்கு பெண்களது பிரதிநிதித்துவம் என்பது நேரடி வேட்பாளர் என்ற கட்டாயம் கொண்டுவரப்பட வேண்டும். தொடர்ச்சியாக பெண்கள் கீழ்மட்டத்தில் இருப்பதை இல்லாமல் செய்து அவர்களையும் அரசியல் ரீதியாக மேலே கொண்டு வர வேண்டும் அத்துடன் பெண்களின் பங்களிப்பினை நேரடி வேட்பாளராக பங்கு பெறச் செய்வதன் ஊடாக பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ளலாம் ஏனென்றால் தேர்தலில் பெண்கள் நேரடி வேட்பாளர்களாக உள்வாங்கப்பட ஒரு குறைபாடே ஆகும்.
அதாவது ஒரு தீர்மானம் எடுக்கும் சபையில் ஒரு பெண் இருந்து பேசுவதை விட அவரோடு இன்னும் மூன்று பெண்கள் சேர்ந்து பேசுவது வழு மிக்கதாகவும் பெண்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கவும் உறுதியாக இருக்கும். அந்த வகையில் கிராம மட்டத்தில் உள்ள பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்களது பிரச்சினையை தீர்ப்பதற்கு நாம் அதிகாரத்தில் இருப்பதன் ஊடாகவே அவற்றை செய்ய முடியும் உள்ளூராட்சி சபைகளுக்கு உள்ள அதிகாரமானது பெண்களில் உள்வாங்குவது ஊடாக பெண்களின் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு உள்ளூராட்சி சபையின் அதிகாரம் வலுமிக்கதாகும். பொதுவாகப் பெண்களின் கருத்துக்கள் சபையில் ஏற்றுக் கொள்ளப்படுவது என்பது குறைவாகவே உள்ளது அதற்கு காரணம் அங்கு பெண்களின் உறுப்பினர்கள் குறைவாக இருப்பதே ஆகும் எனவே பெண்களின்

Source : Votewomensl

பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு தேர்தலில் கொண்டுவரப்பட்ட 25 வீதமான பெண் பிரதிநிதித்துவம் என்பது மேலும் திருத்தப்பட்டு சதவீதம் அதிகரிக்க வேண்டியது கட்டாயமாக நேரடி வேட்பாளர் என்ற திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
இவ்வாறு கடந்த உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து இருந்தார்கள் அவர்கள் தமது தேர்தல் போட்டி தொடர்பாக பலவிதமான கருத்துக்களை தெரிவித்தாலும் ஒரு விடயத்தில் அனைவரும் ஒற்றுமைப்பட்டு நிலையை அவதானிக்க முடிந்தது அதாவது அனைவருமே 25மூ பெண் பிரதிநிதித்துவம் என்பதை நேரடி வேட்பாளர் என்ற முறையில் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்கள் கடந்த தேர்தலில் 25மூ பெண் பிரதிநிதித்துவம் என்பது கட்டாயமாக்கப்பட போதும் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் அது கட்டாயமாக்கப்பட்டது தவிர அப்பன் பிரதிநிதித்துவம் ஆனதைப் நேரடி வேட்பாளர் என்ற வரையறையை கூறவில்லை .இதனால் பல கட்சிகள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி இருந்ததை அவதானிக்க முடிந்தது அதாவது 25மூ பெண்களை தமது வேட்பாளர் பட்டியலில் உள்ள வாங்கிவிட்டு அவர்களை பாசன முறையில் சேர்த்துள்ளனர் இதனால் பல பெண்கள் தமது கட்சிக்கும் சுயேட்சைக் குழுவுக்கு பல்வேறு இடர்களுக்கு மத்தியில் பணியாற்றிய போதும் தமக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முடியாமல் சென்றுள்ளார்கள்.
இது பல பெண்களின் மன ரீதியான ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது பொதுவாகவே இலங்கையைப் பொறுத்தவரையில் பெண்களே அதிகமாக உள்ளார்கள் ஆனால் அவர்களிடம் வாக்குகளைப் பெற்று அதிகமாக அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறுவது ஆண்களே ஆகும். அவ்வாறு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளும் அவர்களும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் அல்லது அதற்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவும் இல்லை மாறாக அங்கு பிரதிநிதித்துவம் பெற்றெடுக்கும் ஒரு சில பெண்களின் கோரிக்கைகளும் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை காணப்படுகின்றது.
எனவே நாட்டில் ஆட்சித்துறை பிரதிநிதித்துவத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஆனது பேரம் பேசும் தகுதி உடையதாக அதிகரிக்கப்பட வேண்டும் மேலும் திருத்தம் செய்யப்பட்டு 25 வீதத்திற்கும் அதிகமான பெண்களின் பிரதிநிதித்துவம் ஆட்சித் துறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் இதற்கான சட்ட மூலங்கள் உருவாக்கப்பட வேண்டும் அவ்வாறு செய்வதன் ஊடாகவே பெண்களின் தேவைகள் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து அவற்றை நிவர்த்தி செய்யவும் பெண்களை வலுப்படுத்தவும் முடியுமாக இருக்கும் இலங்கையில் தற்போதைய நாடாளுமன்றத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆகும் இது ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தில் வெறுமனே இது உலக சராசரியான 23 சதவீதத்தை விட மிகக் குறைவானது என்பது ஒரு விடயம்.

89 நாடுகள் கொண்ட உலக வங்கியின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்திருப்பது 174 ஆவது இடம்.அதாவது மிகவும் குறைவான சதவீதமான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட நாடுகள் என்ற பட்டியல் வழங்கப்பட்டால் இலங்கைக்கு 16வது இடம் கிடைக்கும் இலங்கையை விட அதிக சதவீதமான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட நாடுகளில்
ருவண்டா 64%
எத்தியோப்பியா 39%
நேபாளம் 30%
ஆப்கானிஸ்தான் 28%
ஈராக் 27%
பாகிஸ்தான் 21%
பங்களாதேஷ் 20%
சவுதி அரேபியா 20%
இந்தியா 12%
மலேசியா 10%
மாலைதீவுகள் 6%
நைஜீரியா 6%     என பெண்கள் பிரதிநிதித்துவத்தில் இலங்கையை விட எதிர்பார்க்காத அளவிற்கு இந்நாடுகள் முன்னிலையில் காணப்படுகின்றன. இந்த நிலையிலிருந்து தற்போது காணப்படுகின்ற இலங்கையின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை இருக்கும் நிலையிலிருந்து குறைந்துவிடாமல் தக்கவைத்துக் கொள்வதற்கான பல முன்னேற்றமான செயற்பாடுகளும் ஆதரவுகளும் மேற்கொள்ளப்பட வேண்டியது கட்டாயமாகும். அந்தவகையில் இலங்கையின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சந்திராணி பண்டார, தலதா அத்துகோரல, விஜயகலா மகேஷ்வரன், சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே  , சுமேதா ஜி, ஜெயசேன, அனோமா கமகே, பவித்திரா வன்னியாராச்சி, ஸ்ரீயானி விஜயவிக்கிரம, கீதா சமன்மலி குமாரசிங்க, ஹிருணிகா பிரேமச்சந்திர, துஸிதா விஜயமான்ன,ரோஹினி குமாரி விஜேரத்ன, சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, ஆகியோர் காணப்படுகின்றனர். இவர்களில் சிலர் தங்களது குடும்ப அரசியல் செல்வாக்கு இவ்வாறு பெண் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தங்களது வழக்கமான அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக பெண்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ஆண்களுக்கான பிரச்சினைகள் இல்லாமல் இல்லை ஆனால் பெண்களுக்கான பிரச்சினைகளோடு ஒப்பிடும்போது அவை மிக மிகக் குறைவானவை. ஆண்களை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டிய தேவையென்று ஒன்று தற்போது கிடையாது.
ஆனால் பெண்களை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது ஆகவேதான் இந்த விடயத்தில் பெண்கள் முன்னிலை வகிக்க வேண்டுமே ஒழிய முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் கிடையாது. தற்போதுள்ள அரசியலில் சூழலில் 30 சதவீதமான பெண்களில் அனுப்பினால் மாத்திரம் பெண்களுக்கு அத்தனை உரிமைகளும் நீல கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.ஏனென்றால் ஆண்களால் ஆதிக்கம் செலுத் தப்படும் சமூகச் சூழலில் தனித்துவம் மிக்க பெண்களின் உருவாக்கம் ஒரு வகையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது தங்களுடைய வேலைகளோடு நின்று கொள்ளும் ஒரு வகையான மனப்பாங்கும் அதிகமான பெண்கள் காணப்படுகின்றனர்.
எனவே சமூகத்தில் அடிப்படையான நிலைமையிலிருந்து பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் இதனால் பொது செயற்பாடுகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பெண்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகளும் அதிகரிக்கும் இதன் மூலம் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் ஆகவே பெண்களில் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டு இருக்கின்ற ஒவ்வொரு ஆண்மகனும் பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் அதிகரிப்பதற்காக போராட வேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது இதைத்தான் அரசியல் வர்ணனையாளரான ஜார்ஜ் கார்லின்
“இங்கு அப்பாவிகள் என்று எவரும் இல்லை உங்களுடைய பிறப்புச்சான்றிதழ் உங்களின் குற்றத்துக்கான சான்றிதழ்”என்று குறிப்பிடுவார். எனவேதான் பெண்களின் அரசியல் பங்கேற்பு அதிகரிக்க ஒவ்வொரு ஆண்மகனின் பங்களிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டியது கட்டாயத் தேவையாக என்பது தனியாக குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயம் அல்ல. மேலும் பெண்களின் அரசியல் பங்குபற்றல் ஊக்குவிப்பதற்காக மகளிர் அமைப்புகள் சிவில் அமைப்புகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக அரசியல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்துதல் கருத்தரங்குகளில் பெண்களின் அரசியல் உரிமைகள் கடமைகள் என்பவற்றின் அவசியத்தினை வலியுறுத்துவதுடன் பெண்களின் அரசியல் பங்குபற்றுதல் இடம்பெறும் மூலமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள் போன்றவற்றை சுட்டிக் காட்டுவதன் மூலம் இத் தேர்தல் தொகுதியில் பெண்களின் அரசியல் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.
தேர்தலில் போட்டியிட விரும்பும் பெண்களை ஊக்குவித்து முன்னுரிமை வழங்கி காட்டுபவர்களாக குடும்ப அங்கத்தினர் காணப்படவேண்டும் பெண் வேட்பாளர் போட்டியிட முன் வருகின்றபோது அப்பிரதேச மக்கள் அப்பெண்ணின் இம்முயற்சிக்கு ஆதரவளித்து அப்பெண்ணுக்கு பக்கபலமாக இருந்து செயற்படுதல் வேண்டும் மேலும் குறித்த பெண் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்காகதமது வாக்குகளை வழங்க வேண்டும் மேலும் அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்தி பெண்களை ஊக்கப்படுத்துதல் அரசியல் கட்சிகள் ஊக்குவித்தல் கலாசார ரீதியில் ஊக்குவிப்பு பழங்கள் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் பெண்களின் அரசியல் பங்கு பற்றுதலை பேண முடியும்.
அந்த வகையில் இலங்கையில் முஸ்லிம் பெண்களின் அரசியல் பங்களிப்பு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது அத்தோடு இதுவரை மலையகத்தில் இருந்து எந்த ஒரு பெண்ணும் தெரியவில்லை மாகாணசபை உள்ளூராட்சி மட்டத்தில் உறுப்பினர்களை காணக் கூடியதாக இருந்தாலும் அது திருப்தி அளிக்கக் கூடியது அல்ல மலையகத்தில் குறிப்பிடத்தக்களவு பெண்களின் பங்குபற்றல் இருந்தாலும் கூட அரசியல் விழிப்புணர்ச்சியை நோக்கி போதிய அளவு முன்னேறவில்லை. பெண் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பருவகால கோஷங்கள் ஆகிவிட்டன.அவை பருவ கால வாக்குறுதிகளாக பரிணாமம் பெறுகிறது அதன் பின்னர் காணாமல் போய்விடுகிறது இதற்காக போராடும் சிவில் அமைப்புக்கள் புதிய தந்திரோபாயங்களை வகுப்பது கட்டாயக் கடமையாகும்.
அதிகார சமத்துவத்தை சரி செய்வதற்காக குறிப்பிட்ட வகுப்பினருக்கு பாலினரும் கோட்டா முறையினை பயன்படுத்தி வரும் பல நாடுகள் உலகில் உள்ளன பெண்களின் பிரதிநிதித்துவத்தை அப்படித்தான் சரிசெய்து வருகின்றார்கள் ஆனால் இலங்கையில் பெண்களுக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்து 80 ஆண்டுகளின் பின்பும் அப்படிப்பட்ட குறைந்தபட்ச கோட்டா பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கின்றது தேர்தலின் பின்னர் ஏற்படும் இந்த போதாமைகளை சரி செய்வதற்காக தேசியப்பட்டியல் முறையை பயன்படுத்தும்படி “கெபே” போன்ற அமைப்புகள் தற்போது குரல் கொடுத்து வருகின்றன.
மேலும் இலங்கையில் மக்கள் பிரதிநிதித்துவ சபைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பெண்களின் அரசியல் பங்களிப்பு ஊக்குவிக்கும் வகையில் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக
“அவளை தேர்ந்தெடுப்போம் வன்முறையை ஒழிப்போம்”
என்ற பணி திட்டத்தை ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Source : www.tamilmirror.lk

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அவர்களின் அரசியல் பங்களிப்பை தடுக்கும் முக்கிய காரணியாக இருப்பதாக இந்த பணி திட்டத்தின் பிரதான வேட்பாளரான இலங்கை பாலின அடிப்படையிலான வன்முறை எதிர்ப்பு அமைப்பு கூறுகின்றது.
“நான் அரசியலில் பங்கு கொள்ளும் பெண்களின் உரிமையை மதித்து ஏற்றுக் கொள்கிறேன்”
“நான் ஜனநாயக செயல்முறையில் சமமான பங்காளர்களாக பெண்கள் அரசியலில் பங்குபற்றுவதை ஆதரிப்பேன்”
ஏனோ இப்பணி திட்டத்தின்கீழ் பொதுமக்களிடமிருந்து உறுதிமொழியை பெறும் வகையில் கையொப்பங்கள் திரட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் கூடியளவான பெண்களை வேட்பாளர் பட்டியலில் இடம் பெறச் செய்தல் பெண்கள் தொடர்பான விடயங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளல் பெண்கள் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்தி ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்தல் உரையாற்ற தேர்தலில் உறுதி செய்யுமாறு கூறுதல் இவ்வாறான கோரிக்கைகள் சட்டத்தில் உருவாக்கப் படுவதன் மூலம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
எனவே சமூக ஒடுக்கு முறைகளுக்குள் ஆகிக் கொண்டிருக்கும் சமூக சக்திகளின் முக்கிய சக்தியாக பெண்கள் காணப்படுகின்றனர் ஆகவே சகல கட்சிகளும் பெண்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு சரியான திறமையான செயல்திறன் உள்ள பெண்களை அரசியலில் சரியான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் களமிறக்கி நாட்டின் நன்மைக்கு வழியமைப்பார்கள் என நம்புவோமாக!
“ஒரு வீட்டை நடத்துவதில் உள்ள சிக்கல்களைப் புரிந்து கொள்ளும் எந்த ஒரு பெண்ணும்,
ஒரு நாட்டை நடத்துவதில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு அருகில் இருப்பார்கள்”
– மார்கரெட் தட்சர் –

REFERENCES
  1. Imran.m.y.m.y ,(nd). Challenges Of Women Political Participation In Srilanka: With Special Reference To Kalmunai Muslim Divisional Secretariat; department of political science
  2.  சரவணன்.என், (2001). இலங்கை அரசியலில் பெண்களும் பெண்களின் அரசியலும் : மூன்றாவது மனிதன் பதிப்பகம்.
  3. https://www.virakesari.lk/article/46081
  4.  http://www.tamilmirror.lk/181053
  5.  https://matram.org/?p=3676
  6.  https://www.google.com/amp/s/www.bbc.com/tamil/amp/srilanka-42166048
  7.  https://www.google.com/amp/s/www.bbc.com/tamil/amp/srilanka-42330288

About the Author:

admin

Thirukumar Premakumar

Share This Entry

Array