Single Project Image

The Story of Hold stone and its Miracle

நவீன மருத்துவத்தை பிரம்மிக்க வைக்கும் மர்மக்கல்

( அருகிவரும் மர்மக்கல்லின் வரலாறு)

ஒரு சமூகத்தின் பண்பாடு> சடங்குகள்> பழக்கவழக்கங்கள்> தனித்தனமை அனைத்துமே ‘நம்பிக்கை’ என்ற தாயின் வயிற்றறுக் குழந்தைகளாகவே பிறக்கின்றன. ஆதிகால மனிதன் தன்னை சுற்றி நடைபெறும் காரியங்களுக்கு தகுந்த விளக்கம் கிடைக்காத சூழ்நிலையில் சில விளக்கங்களை தானே கற்பித்து அதனை பின்பற்ற ஆரம்பித்தான். மனித வாழ்க்கையின் நம்பிக்கைக்கான பிறப்பு இங்கே தான் ஆரம்பித்தது. உலக நாடுகளில் ஓராண்;;;;;;டில் பாம்பு கடிக்கு பலியாகுவோரின் எண்ணிக்கை 81000 முதல் 138000 வரை உள்ளது என்று கூறும் உலக சுகாதார நிறுவனம் பாம்பு கடியினால் சுமார் நான்கு இலட்சம் பேர் நிரந்தரமாக மாற்றுதிறனாளியாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் விஷமுறிவு மருந்து தயாரிக்கும் முறையில் எவ்வித முன்னேற்றமுமில்லை. தற்போதுள்ள விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படும் முறைப்படி பாம்புகளிலிருந்து எடுக்கப்படும் விஷமானது குதிரை அல்லது செம்பறியாட்டின் மீது ஊசி மூலமாக பாய்ச்சுவர். இதனால் அவற்றில் இரத்தத்தில் எதிர்ப்பு திரவங்கள் சுரக்க ஆரம்பிக்கும். இந்த நோய் எதிர்ப்புப் பொருளை இரத்தத்தில் இருந்து தனியாக பிரித்தெடுத்து அதனையே பாம்பு கடிக்கு விஷமுறிவாக பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இவை தனித்தனியாக ஒவ்வொரு பாம்பு விஷத்திற்கும் தனியாக பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு பாம்பின் விஷத்தை வேறு ஒரு பாம்பு கடிக்கு விஷமுறிவாக பயன்படுத்த முடியாது. இவ்வாறு பயன்படுத்தும் போது உடலில் மேலும் அதிக விஷம் ஏறி உயிர் ஆபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு. இம்முறைக்கு மாற்றம் வேண்டி பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டவண்ணமுள்ளனர். இவர்களை வியப்பில் ஆழ்த்தி அனைத்து வகையான விஷமுறிவுகளையும் துச்சமாக்கியுள்ளது ஒரு சாதாரண கல்.

ஆம்> இலங்கையில் முஸ்லிம்களை சிறுபான்மையாக கொண்ட மொனராகலை மாவட்டத்தில் பிபிலை எனும் ஊரிலுள்ள கொடிகமுவ எனும் இடத்தில் காணப்படும் கல்லினைப்பற்றியே விபரிக்கிறேன். இதுவரை 8 தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டுவரும் இக்கல்லில் அவ்வாறு என்ன தான் உள்ளது? என்பதே இப்போது நம் அனைவர் மனதிலும் எழும் கேள்வி. ஆம்> அதி சக்தி வாய்ந்த விஷங்களை உறிஞ்செடுக்கும் வல்லமை கொண்டு காணப்படுவதே இக்கல்லின் சிறப்பம்சமாகும். கொடிகமுவ எனும் இடத்திலுள்ள ஒரு மலைக்குன்று பகுதியிலிருந்தே இக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்கல்லினை கண்டெடுக்கும் போது அக்கல்லினை சுற்றி பல பாம்புகள் இருந்ததாகவும் அங்கு பல பாம்புப் புற்றுகள் காணப்பட்டதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர். இன்னும் சிலர் இக்கல்லினை விண்வெளிக்கல் எனவும் குறிப்பிடுகின்றனர். எது எவ்வாறாயினும் இக்கல் இன்று இரத்தினக்கல் அளவிற்கு பேணிப் பாதுகாக்கப்படுவது ஆச்சரியத்திற்குறியதொன்றாகும். இக்கல்லினை முதன் முதலில் கண்டெடுத்தவரின் பெயர் அஷ்ஷெ;ய்க் அலி மௌலானா இவர் இக்கல்லினை அடையாளங்கண்டு அதற்கான ஒரு குடிசையை அமைத்து அன்றைய மக்களுக்கு பாம்புக்கடி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

அதுமாத்திரமின்றி இக்கல்லிற்காக இஸ்லாமியர்களின் அன்னதானமான கந்தூரி விழாவினையும் வருடம் தோறும் நடாத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். அத்துடன் இக்கல் அன்னல் நபி (ஸல்) அவர்களின் 40வது தலைமுறையில் வந்துதித்த அஷ்ஷெ;ய்க் ஸதாத் அதி சங்கைக்குரிய முஸ்தபா மௌலானா அவர்களின் அருமையான பொக்கிஷம் எனவும் அழைக்கப்படுகிறது. மற்றும் இக்கல் தொடர்பான இவரின் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றினையும் அந்த இடத்தில் காணக்கூடியதாக உள்ளது. இக்கல் தொடர்பாகவும் இதற்காக நடாத்தப்படும் கந்தூரி தொடர்பாகவும் கிடைக்கப்பெற்ற களத்தகவல்களை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.

உண்மையில் நம் அனைவரையும் வியப்பூட்டும் வகையில் இக்கல்லின் உபயோகம் காணப்படுகிறது. இக்கல்லின் மூலம் பிபிலையில் இருக்கும் முஸ்லிம்கள் மாத்திரமின்றி சிங்கள> தமிழ் மக்களும் பயன்பெறுவது குரிப்பிடத்தக்க விடயமாகும். இக்கல்லினால் அதிகம் பயன் பெறுவது வயல் மற்றும் தோட்டங்களில் வேலை செய்யும் சிங்கள இன மக்களாகும். இக்கல்லின் உபயோகம் பற்றி நேரில் சென்று பார்த்த போது அன்றைய தினம் இடம்பெற்ற வியப்பூட்டும் தகவல்கள் அடுத்து!

அன்று வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணி அளவில் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பினை அடத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றேன் அங்கு பியதாச எனப்படும் பௌத்த நபர் ஒருவர் துனுகொல்ல எனும் இடத்தில் வயலில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது என்னும் விஞ்ஞானப் பெயர் கொண்டு அழைக்கப்படும் நல்ல பாம்பு கடித்தமையினால் சுமார் 15km தூரமுள்ள கொடிகமுவ எனும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டார். கல்லின் பராமரிப்பாளர் காலில் பாம்பு கடித்த இடத்தினை கூறிய கத்தியினால் சற்று ஆழமாக வெட்டி அவரின் காலினை தூய பசும்பாலினால் கழுவினார். அவரின் காலினை அக்கல்லில் வைத்து அவரின் மனைவியை நன்கு பிடித்துக்கொள்ளுமாறு கூறினார்.

நான் அவரிடம் பல கேள்விகளை தொடுத்த போதிலும் அவரினால் என்னுடைய கேள்விகளுக்கு பதில் கூற முடியாத அளவிற்கு சுயநினைவின்றிருந்தார். அவருடன் வந்திருந்த முச்சக்கர வண்டி சாரதியிடமே அவர் பற்றியும் அவரின் இந்நிலைக்கான காரணம் பற்;றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. 5 நிமிடங்களின் பின்னர் கல்லைப் பராமரிப்பவர் அவரின் முகத்தில் நீரினை தெளித்ததும் அவர் சுயநினைவுக்கு திரும்பினார். என்னால் நம்பவே முடியாத நிகழ்ச்சி கண்முன் நிகழ்ந்தது.

அந்நீர் பற்றி நான் அவரிடம் விசாரித்த போது அது அந்த கல்லினை கழுவி பெறப்பட்ட நீர் என்பதை அவர் எனக்கு விளக்கினார். நான் வியப்பில் உறைந்து போன தருணம் அது. பின்னர் என்னை சுதாகரித்துக் கொண்டு பியதாசவிடம் அவரின் நிலை பற்றி விசாரித்த போது தன்னுடைய காலினை அசைக்க முடியாதுள்ளது என்றும் தன் காலினை கல் இழுத்துப்பிடித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து தன் காலினை கட்டெறும்பு கடிப்பதைப் போன்று உணர்வதாகவும் கூறினார். அடுத்த வினாவாக நான் ஏன் நீங்கள் 15km தொலைவிலுள்ள இந்த இடத்திற்கு வருவதற்கு பதிலாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்றிருக்கலாமே என்று வினவினேன். அதற்கு அவர் கூறிய பதிலானது ‘எங்கள் ஊரிலுள்ள அனைவரும் இங்கு தான் வருகிறார்கள். வைத்தியசாலைக்கு சென்று உயிரிழந்தவர்கள் பலர் உள்ளனர். ஆனால் இங்கு வந்து உயிரிழந்தவர்கள் எவருமில்லை எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து அவர் கூறியது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. பாம்பு கடித்தவுடனேயே கல்லிற்குத்தான் செல்ல வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டுமே மனதில் இருக்க வேண்டும். இல்லாமல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லலாம் என்ற இரட்டை எண்ணத்துடன் வந்தால் கல்லினால் ஏற்படும் வலியானது அதிகமாகக் காணப்படும் என்று அவர் கூறியது விசித்திரமாக இருந்தது. 20 நிமிடங்களின் பின்னர் கல்லிலிருந்து பியதாசவின் கால் தானாகவே விடுபட்டது.

பின்னர் அவர் சாதாரணமாக எழுந்து நடக்கலானார். அவரின் காலை வெள்ளைத் துணியால் கட்டி அவரை அவர் செல்லும் போது அருகே இருக்கும் பாம்பு உண்டியலில் 100 ரூபா பணம் செலுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் அக்கல்லின் மேல் பாலை ஊற்றினால் பாலின் நிறம் சற்று நீலமாக மாறியதைக் கண்டு அதிர்ந்து போனேன். விஷத்தினை பொருத்து பாலின் நிறம் மாறும் என கல்லின் பராமரிப்பாளர் என்னிடம் விளக்கமளித்தார்.

விசநீக்குகல்லினால் பயன் பெறும் அனைவரும் தங்களால் முடிந்த சிறுதொகை பணத்தை உண்டியலில் இடுவதனால் வருடமொன்றிற்கு அக்கல்லினால் பெறப்பட்ட பணத்தை வைத்தே வருடா வருடம் கந்தூரி ஏற்பாடு செய்யப்படுகிறதாக மேலும் கூறினார். இதற்கு மேலாக தேவைப்படும் பணத்தொகையினை அங்குள்ள முஸ்லிம்> சிங்கள> தமிழ் இன மக்கள் கந்தூரிக்காக வழங்குவதாகவும் தெரிவித்தார். வருடத்தில் 15 நாள் நடைபெறும் இக்கந்தூரி விழாவிற்கு நாட்டில் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் வருகை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏனைய கந்தூரிகளில் முஸ்லிம்கள் மாத்திரமே பங்கு கொள்வார்கள். ஆனால் இதில் மூவின மக்களும் கலந்துகொண்டு இவ்விழாவை நடத்தி தமது காணிக்கைகளையும்> நேர்ச்சைகளையும் வழங்குவதாக குறிப்பிட்டார்.

கந்தூரி விழா நடக்கும் அந்த 15 நாட்களிலும் அக்கல்லும் அக்கல்லை வைத்திருக்கும் இடமும் அழகிய முறையில் அலங்கரிக்கப்பட்டு காணப்படுமென அவர் கூறினார். இக்கந்தூரிக்கு விஷேட அதிதிகளாக அவ்லியாக்களின் பரம்பரையிலிருந்து வந்த இறுதி மௌலானவே அழைக்கப்படுவதாகவும் கூறினார். இன்று அவர்களின் வழித்தோன்றலில் 41வது மௌலானவே அஷ்ஷெ;ய்க் அப்துல்லாஹ் மௌலானா அவர்களே இருப்பதாக கூறினார். இவர் ஹம்பாங்தோட்டையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதனால் அதிகமாக ஹம்பாந்தோட்டை மக்கள் கந்தூரிக்கு வருகைத்தருவதாகவும் கூறினார். இம்மர்மக்கல் பற்றி ஒரு சில பிரதேசவாசிகளே தெரிந்து வைத்துள்ளனர். இதனை வெளியுலகுக்கு கொண்டுவந்து இந்நம்பிக்கைசார் பாரம்பரிய மருத்துவ முறையினை அனைவருக்கும் அறியப்படுத்துவதே காலத்தின் தேவை.

தற்கால மருத்துவத்தின் எழுச்சியும் ஆதிக்கமும் 1800களில் அமெரிக்கா> கனடா> ஐரோப்பா போன்ற மேற்கு நாடுகளில் தோன்றின. இவை வெறுமெனே மனித உடலில் நோய்கள் ஏற்படுவதை தடுக்கும் பணியையே புரிகின்றன. ஆனால் மனிதகுலம் கண்டுபிடித்துள்ள நம்பிக்கைசார் பாரம்பரிய மருத்துவம் உடல்,மனம்,சமூகம் என்ற மூன்றையும் குணப்படுத்தும் சக்தியுள்ளதாக விளங்கி வருகின்றது. அத்துடன் இவை பண்பாட்டின் பிரிக்க முடியாத கூறாக இன்றளவும் நிலைத்து வருகிறது. அது;துடன் நவீன மருத்துவ முறைகளின் அசுர தாக்குதலுக்கு இடையேயும் எதிர்த்து நின்று சாகாவரம் பெற்றதாய் திகழ்ந்து வருகின்றது.

புதிய நாகரீகம் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து வந்தாலும் கலாசார> பாரம்பரிய> மரபு ரீதியான சடங்குகளையும் நம்பிக்கைகளையும் மக்கள் இன்று வரை பின்பற்றி வருவது இவைமேல் கொண்டுள்ள நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அறிவியல் நோக்கு என்ற வண்ணக் கண்ணாடியை அணிந்து கொண்டு மக்களின் பாரம்பரிய கலாசார நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகள் என்று ஒதுக்குவது முறையாகாது. காரணம் குறிப்பிட்ட மக்களின் பண்பாட்டை புரிந்து கொள்வதற்கு இந்த வண்ணக் கண்ணாடி பொருந்தாது என்பதே உண்மை. மக்களின் சடங்கு நிகழ்வுகளையும், நம்பிக்கைகளையும் பண்பாட்டு பின்புலத்தில் ஆழ்ந்து நுணுகிப் பார்ப்பது புதிய தேடலுக்கும் புரிதலுக்கும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

மொனறாகலை 

மேலே தரப்பட்டுள்ள கட்டுரையின் தகவல்கள் மற்றும் தரவு யாவும் எமது நிறுவனத்தின் புலமைசார் சொத்து அல்ல என்பதுடன் இவ் கட்டுரையை எழுதிய நபரையே அது சாரும். இது எமது நிறுவனத்தின் கீழ் செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றின் பகுதியாகவே வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடப்படல் வேண்டும்.