Blog

Narratives of SYA: Hear from Jehasini Jesurajah!

Jun 02, 2022

0

TAMIL

SYA இன் அனுபவப் பகிர்வுகள்: இது ஜெஹாஸினி ஜேஸுராஜாவின் கதை.

ஒவ்வொரு யுவதியிலும் காணப்படும் சாதிக்க வேண்டும்; சாதிக்க முடியும் என்ற எண்ணம் அவளை வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்லும். அந்தப் பாதையில் அவளின் பயணத்துக்கு ஒரு துணையாக, ஒரு பலமாக ஒரு களம் கிடைத்தால் என்ன நிகழும்? 

வாருங்கள்; தெரிந்து கொள்வோம். இது அவ்வாறான ஒரு யுவதியின் பாதை SYA மூலம் வலுப்படுத்தப்பட்ட கதை. 

“நான் ஜெஹாஸினி. மட்டக்களப்பை சேர்ந்தவர். சமூக வலைத்தளத்திலான பதிவிடலின் மூலம் SYA பற்றி அறிந்து கொண்டதிலிருந்து நேர்காணல், அதன் பின்னரான தெரிவு என SYA உடனான எனது பயணம் ஆரம்பமாகியது. அதிலிருந்து  இன்று வரை, SYA இன் மூலம் நான் கற்றுக் கொண்டவையும் பெற்றுக் கொண்டவையும் அதிகம் என்றே கூறுவேன். SYA இன் வெற்றியில் ஒரு வகிபங்கு எனக்குமுள்ளது என்பதே என்னை பெருமிதம் அடைய வைக்கின்றது. 

நான் எனது தொழில் துறையாக கணக்கீடு மற்றும் அதனோடு இணந்த சேவைத் துறைகளையே தேர்ந்தெடுத்துள்ளேன். SYA அத் துறைகள் சார்ந்த புது பொழிவுடனான ஒரு அனுபவத்தை எனக்கு அளித்துள்ளது.

இந்த நான்கு மாத பயிற்சி எனக்கு தொழில் துறை அனுபவத்தை அளித்தது. அது மாத்திரமன்றி நான் பயிற்சி பெற்றது ஒரு அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் என்பதால் இப்பயிற்சி மூலம் கணக்கீடோடு இணைந்து எவ்வாறு சமூகத்துடன் இணைந்து செயற்படுவது என்பதையும் என்னால் அறிந்து கொள்ள கூடியதாக இருந்தது. 

எனது இன்டரன் பயிற்சி காலத்தில் பயிற்சி பெரும் நிறுவனத்தின் சட்ட திட்டங்களை மதித்து அதற்கிணங்க நடப்பதுடன் IYAP இன் திட்ட விதிகளுக்கு இணங்கி அதற்கேற்ப எனது ஆற்றலையும் வளர்த்து கொள்வதிலேயே அதிக ஈடுபாட்டை காட்டினேன். 

என் ஈடுபாடும் SYA எனக்கு அளித்த வாய்ப்பும் என் 

தொழிலியல் அனுபவத்தை மேம்படச் செய்தது; என் சுய ஆற்றல் விருத்திக்கும் வழி வகுத்தது; பல புதிய கணக்கீட்டு நுட்ப முறைகளை அறிந்து கொள்ளவும் அதனை கையாண்டிடவும் எனக்கு பாதை அமைத்து தந்தது; ஒரு புதிய வேலை சூழலில் புதிய நபர்களை நண்பர்களாக்கி தந்தது. 

ஆகவே, SYA என்னிடத்தில் என் எதிர்காலத்துக்கான திறவுகோலை கொண்டு வந்து தந்திருக்கிறது என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறேன். 

இவ்வளவும் எனக்களித்த SYA, Capstone இன் ஊடாக கள அனுபவத்தை வழங்குவதன் மூலம் SYA இன் ஒளிர்வையும் பிரகாசத்தையும் பன்மடங்காக மெருகூட்டியிருக்கிறது. என்னைப் போன்ற இன்னும் பல நூறு இளைஞர்களில் ஏற்படுத்தி இருக்கின்ற இந்த நேர்மறையான மாற்றங்களுக்காக நிச்சயம் SYA இற்கு நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். 

SYA பற்றி ஒற்றை வரியில் கூறுவதாயின் SYA கொண்டாடப்பட வேண்டிய ஒரு திட்டம் என்றே கூறுவேன்!!!”

இது அவருடைய கதை.  மேலும் இது போன்ற கதைகளை கேட்க ஆர்வமாக உள்ளீர்களா?  SYA வலைப்பதிவு தளத்துக்கு செல்லுங்கள், மேலும் வாழ்க்கையை மாற்றும் அனுபவங்களின் கதைகளால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

ENGLISH

Narratives of SYA: Hear from Jehasini Jesurajah!

The desire to succeed that can be found in every young lady is what propels her forward. What if she discovered a platform that would complement and strengthen her trek down that road? 

Come, let’s know more about it. This is the story of how SYA helped a young woman on her way. 

“My name is Jehasini, and I’m from Batticaloa. I learned about SYA through social media postings, and my experience with SYA began after facing an interview and being accepted into the program. What I’ve learned and achieved via SYA has made me proud since then. 

My professional field of choice is accounting and related service industries, and SYA has provided me with valuable experience with field-specific new pursuits.  

This four-month internship provided me with valuable patronage experience. In addition, because I was trained and completed my internship at a non-profit organization, I was able to learn how to work with the community while also getting trained in the account field. 

Throughout my internship, I was committed to following the host organization’s rules and developing my abilities to meet IYAP’s project principles and requirements. 

My involvement and the platform that SYA provided me increased my professional experience; opened the road for self-progress; enabled me to learn and master many new computational techniques; and, despite being in a new setting, it introduced me to new people and made them my friends. 

Therefore, I believe it is appropriate to say that SYA has brought me the key to my future. 

SYA is incredibly commendable. The magnificence of SYA has been tripled as it applies field experience through capstone activities. We owe SYA a debt of appreciation for the great transformations that have occurred in myself and hundreds of other young people. 

In a nutshell, I believe SYA is a project worth celebrating!!!”

This is her narrative. Would you like to hear more of these types of stories? You will be amazed by the accounts of life-changing encounters on the SYA blog site.

SINHALA 

SYA හි ආඛ්‍යාන: මෙය ජෙහාසිනි ජේසුරාජාගේ කතාවයි!

සෑම තරුණියක තුළම දැකිය හැකි සාර්ථක වීමට ඇති ආශාව ඇයව ඉදිරියට තල්ලු කරයි. එම මාර්ගයේ ඇයගේ ගමනට අනුපූරක සහ ශක්තිමත් කරන වේදිකාවක් ඇය සොයා ගත්තොත්?

එන්න, අපි ඒ ගැන වැඩි විස්තර දැන ගනිමු.  SYA, යුවතියකට ඇයගේ අරමුණු කරා යන්නා වූ මගදී උදව් කළ ආකාරයයි මේ කතාව.

 “මගේ නම ජෙහාසිනි, මම මඩකලපුවේ වාසය කරමි. මම SYA ගැන දැන ගත්තේ සමාජ මාධ්‍ය පළ කිරීම් හරහා, SYA සමඟ මගේ අත්දැකීම් ආරම්භ වූයේ සම්මුඛ පරීක්ෂණයකට මුහුණ දී වැඩසටහනට පිළිගැනීමෙන් පසුවය. SYA හරහා මා ඉගෙන ගත් සහ ලබාගත් දේ බොහෝය. එදා ඉඳන් මට ඒ ගැන ආඩම්බරයි.

මගේ වෘත්තීය තේරීමේ ක්ෂේත්‍රය ගිණුම්කරණය සහ ඒ ආශ්‍රිත සේවා කර්මාන්ත වන අතර SYA මට ක්ෂේත්‍ර-විශේෂිත නව ලුහුබැඳීම් සමඟ වටිනා අත්දැකීමක් ලබා දී ඇත.

මෙම මාස හතරක සීමාවාසික පුහුණුව මට වටිනා අනුග්‍රහක අත්දැකීමක් ලබා දුන්නේය.  ඊට අමතරව, මම ලාභ නොලබන ආයතනයක පුහුණුව ලබා මගේ සීමාවාසික පුහුණුව අවසන් කළ නිසා, ගිණුම්කරණය ඉගෙන ගන්නා අතරම ප්‍රජාව සමඟ වැඩ කරන ආකාරය ඉගෙන ගැනීමට මට හැකි විය.

මගේ සීමාවාසික පුහුණුව පුරාම, සත්කාරක සංවිධානයේ නීති රීති අනුගමනය කිරීමට සහ IYAP හි ව්‍යාපෘති මූලධර්ම සහ අවශ්‍යතා සපුරාලීම සඳහා මගේ හැකියාවන් වර්ධනය කිරීමට මම කැපවී සිටියෙමි.

මගේ මැදිහත්වීම සහ SYA මට ලබා දුන් වේදිකාව මගේ වෘත්තීය අත්දැකීම් වැඩි කළේය.  ස්වයං-ප්‍රගතිය සඳහා මාර්ගය විවෘත කළේය;  බොහෝ නව පරිගණක ශිල්පීය ක්‍රම ඉගෙන ගැනීමට සහ ප්‍රගුණ කිරීමට මට හැකි විය;  සහ, නව පසුබිමක සිටියද, එය මට නව පුද්ගලයින් හඳුන්වා දී ඔවුන් මගේ මිතුරන් බවට පත් කළේය.

ඒ නිසා මගේ අනාගතයට යතුර SYA විසින් මට ගෙනාවා යැයි කීම සුදුසු යැයි මම විශ්වාස කරමි.

SYA ඇදහිය නොහැකි තරම් ප්‍රශංසනීයයි.  ක්ෂේත්‍ර අත්දැකීම් සහ කැප්ස්ටන් ක්‍රියාකාරකම් හරහා එහි විශිෂ්ටත්වය තුන් ගුණයකින් වැඩි වී තිබේ. මා සහ තවත් සිය ගණනක් තරුණ තරුණියන් තුළ ඇති වූ විශාල පරිවර්තනයන් පිළිබඳව අපි SYA ට ණයගැතියි.

කෙටියෙන් කිවහොත්, SYA සැමරීමට වටිනා ව්‍යාපෘතියක් බව මම විශ්වාස කරමි!!!”

මේ ඇයගේ කතාවයි.  මෙවැනි කතා තවත් අසන්නට ඔබ කැමතිද?  SYA බ්ලොග් අඩවියේ ඇති ජීවිතය වෙනස් කරන හමුවීම් පිළිබඳ කතා ඔබ මවිතයට පත් කරනු ඇත.

About the Author:

Share This Entry